×

அதிக சிக்சர்... டி வில்லியர்சை முந்தினார்!

உலக கோப்பையில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல்,  தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் இருவரும் தலா 37 சிக்சர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 3 சிக்சர்களை தூக்கிய கேல், டி வில்லியர்சை 2வது இடத்துக்குத் தள்ளி 40 சிக்சர்களுடன் முதலிடத்தை தன்வசமாக்கிக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (31 சிக்சர்), பிரெண்டன் மெக்கல்லம் (நியூசி., 29), ஹெர்ஷல் கிப்ஸ் (தென் ஆப்ரிக்கா, 28), சச்சின் (இந்தியா, 27), ஜெயசூரியா (இலங்கை, 27) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

* ஒருநாள் போட்டிகளில் கிறிஸ் கேல் தொடர்ச்சியாக 6வது அரை சதத்தை விளாசியுள்ளார்.
* ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 11வது தோல்வியை பதிவு செய்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
* உலக கோப்பையில் பாகிஸ்தான் எடுத்த 2வது மிகக் குறைந்த ஸ்கோர் (105) இது. முன்னதாக, 1992 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 74 ரன்னில் சுருண்டுள்ளது.

Tags : De Villiers , High sixer ,De Villiers Beating!
× RELATED அதிரடி வீரர்களின் ஆதிக்கத்தால் இந்த...